எலும்பும் தோலுமாய்
ஏக்கர் கணக்கில் உழவுதரும்
எங்களில் ஒருவரான ஏர்மாட்டிற்க்கு
வைக்கோல் கொடுக்க முடியாமல்
வந்த விலைக்கு விற்ற
வாழா வெட்டிகள் நாங்கள்....
கடைசி விதை வரை
களம் கொழிக்கும் கனவோடு
மார் இறுக உழைத்து
பயிர் பெறுக மழை வேண்டி
வானம் பார்க்கும் பூமியை கொண்ட
வாடிக்கை மனிதர்கள் நாங்கள்...
சொகுசு ஊர்திகளையும்
குளிர்சாதன பேருந்துகளையும்
காட்சிபொருளாய் பார்த்து விட்டு
சாதாரன ஊர்திக்காய் மணிக்கணக்கில்
சத்தமில்லாது காத்திருக்கும்
சாமானிய சிறுகுடிகள் நாங்கள்...
சிறு மளிகை அங்காடியும்
தள்ளுவண்டி காய்கறி கடையும்
தாயாக சோறு தந்தநாள் மறந்து
அயல்நாட்டு மொத்த கடைகளுக்கு
அனைத்தயும் அடகுவத்து அடங்கிபோன
அப்பாவி ஜென்மங்கள் நாங்கள்....
உழைப்பதை எல்லாம் பெருமுதலாளிக்கு
உண்மையாய் கொடுத்து விட்டு
வயிற்று பசி போவதற்க்கு
ஒற்றை ரூபாய் அரிசிக்காய்
மடியேந்தி நிற்க்கும்
மதிகெட்ட மகராசிகள் நாங்கள்...
வாழ்வாதாரம் ஒன்றுக்காய்
வலையெடுத்து கடலுக்குள் போக
வழிநெடுக துயரங்கள் சேர
மீன்பிடிப்பதை விடுத்து
உயிர் பிடித்து வீடு வரும்
உப்பு சப்பில்லாதவர்கள் நாங்கள்....
தினம் நான்கு தேனீரும்
தெருக்கடை பண்டங்களும்
தைரியமாய் வாங்கி உண்டுவர
திக்கு தெரியாத விலைவாசியில்
உணவுக்கே ஊர்சுற்றி வரும்
ஒன்றுமறியா காற்றாடிகள் நாங்கள்...
கோடிகளில் புரல்வோரும்
மாடிகளில் வாழ்வோரும்
ஜாதிகளில் திகல்வோரும்
ஆட்சியில் இருப்போரும்
பாதகமாய் வாழ்ந்து வரும் - இந்த
பாமரரை நினைப்பீரோ...?
இணையத்தில் வெளிவந்த கவிதை:
நன்றி http://www.tamilauthors.com/03/101.html
கவிதை என்பது வாசித்துவிட்டு போவதற்கல்ல.... அவை வாசனைமிக்க மலர்கள் ரசனையோடு நுகருங்கள்....! - தினைக்குளம் கா.ரமேஷ்
Thursday, December 10, 2009
Tuesday, October 13, 2009
பிரிதலும்... புரிதலும்...
பொருளீட்டும் காரணமாய்
பருந்தையொத்த வாகணத்தில் நான்
பயணித்த காலங்களில்...
கல்யாணத்திற்க்கு காத்திருந்த
கனியமுது தங்கைகளும்
பொருள்களை சேர்த்திடாமல்
புண்ணியங்களை சேர்த்திருந்த பெற்றோரும்
புத்தியில் வந்துபோக...
புதுமகவை எதிர்நோக்கி காத்திருந்த
பூ உன் நினைவு நிறுத்தி
நெடுநேரம் நிலைகுத்தி நின்றேன்....
பாசி படர்ந்த ஒற்றை வயலில்
பாதம் பதித்து பழக்கப்பட்ட கால்கள்
பாலைவன மணலை தினம் தொட்டுபார்க்க
சூரியன் உச்சிமீது கனலை கொட்டிதீர்க்க
இப்படியாய்
நெருப்பொத்த தேசத்தில் எனக்கு வேலையாம்
நெஞ்சம் சோர்ந்து போகிறது தினம் கோழையாய்....
அங்கே
வெள்ளையும் கருப்புமாய் மனிதர்கள் - அவர்பிள்ளைக்கு
வேடிக்கை பொம்மையாய் எம்மேல் கொடுமைகள்
எள்ளுக்காய் அளவில் சிறு எறிகணைகள்
கொல்லுதல் இல்லாமல் முழங்கால் குறிபார்க்க
எதிர்த்து நியாயம் கேட்போர் எல்லோருக்கும்
ஏதிலி என்றோர் ஏளனமான பதில்இருக்கும்...
ஏறுபூட்டி உழுத நேரங்களில் அன்பே - உன்னோடு
இன்பமயமாய் கூடி வாழ்ந்து வந்தேன்
தார்கூட்டி எடுக்கும் இந்த தேசத்தில்
தாரகை உன்நினைவில் தவியாய் தவிக்கிறேன்
மாலைநேர சூரியன் மறைந்துஓட - உன்
மந்தகாச புன்னகை நினைவில் மயங்கிஇருக்க
தாணியங்கி இயந்திரமாய் களைப்பில் கண்சரிய
தவிப்பில்வந்த கண்ணீரை தலையணை அறியும்...
ஒலிவாங்கியில் உன்னோடு உலாவிய நேரத்தில்
உதடுஒட்டா முத்தம் ஒன்றை உலுப்பிவிட்டாய்
அது சொல்லிப்போனது
தள்ளிப்போகும் நாளுக்காய் தவிப்பதாய் - எனைவிட்டு
தனியாய் இருப்பதை தினம் வெறுப்பதாய்
அந்திசாய்ந்த விளக்கொளியில் அத்தனையையும் முறைப்பதாய்
அகல்விளக்கினை பார்த்து அர்த்தமற்று சிரிப்பதாய்....
என் கருவரையின் தோழிகளை
மணவறையில் பார்த்து விட்டேன் - காதல்
கண்மனியே வந்துவிட்டேன் கவலைபட்டினி தேயவேண்டாம்
இன்னொருமுறை நான் உன்னை பிரியமாட்டேன்
இந்த தேசத்தை விட்டு போகமாட்டேன்...
நோகாமல்பணம் கிடைக்குமென்று நூறுநாள்வேலை செய்யமாட்டேன்
நிறையபொருள் கிடைக்குமென்று நெடுந்தூரம் பிரியமாட்டேன்
சோம்பேறியாக்கும் கூட்டத்தில் இணையமாட்டேன் - உண்ண
சோறுபோடும் நம்நிலத்தில் உழைக்க தயங்கமாட்டேன்...!
நன்றி தமிழ்மன்றம்.காம்
தமிழ்மன்ற 18 வது கவிதை போட்டியில் இரண்டாம் இடம்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21209

Tuesday, September 29, 2009
தேடுகிறோம் சுதந்திரத்தை...
வியர்வை ஒழுகி
நரம்புகள் புடைத்து கிடைக்கும்
ஒருபோகம் விளைச்சலையும்
விலை தேடி அலையும்
விபரம் அறியா மக்களுக்கு
உங்களின் விரல்களின் எண்ணிக்கைதான்
விடுதலைக்காய் பெற்ற நம் சுதந்திரமா..?
உள்ளாடை வெளிதெரிய
உடுத்தும் உடைக்கு கொடுக்கும் சுதந்திரம்
ஒன்றுமே இல்லாத
உழைப்பாளியை நோக்கி - கோவணமென்று
உதாசீணம் செய்வதுதான்
உல்லாசதாரிகள் உங்களது சுதந்திரமா..?
கீழ்மட்டம் மேல்மட்டம் என
குலங்களின் பெயர்சொல்லி
கூத்தடிக்கும் கொடூரர் உங்களுக்கு
கோவிலுக்குள் நுழைவதை தடுக்க
கொடுத்தது யார் சுதந்திரம்..?
வாக்குகள் விற்பனைக்கு என
வர்த்தக பலகை வைத்திருக்கும்
வழிப்பரியர் உங்களிடத்திலா
வாழ்க்கையின் சுதந்திரத்தை தேட...
மலம் தின்ன வைத்து
மனம் கொன்று வாழும்
மனிதர்கள் இவர்களிடத்திலா நம்
மகத்துவமான சுதந்திர கீதம் பாட...
நவீன பாஞ்சாலியாக
நடு சாலையில் துகிலுரிக்க
நாணம் இல்லா மனிதர்கள்
நாற்புறமும் பார்த்திருக்க
நாம் எங்கே போய் தேடுவது
நல்லதொரு சுதந்திரத்தை..?
ஏழ்மை... தாழ்மை...
எல்லாவற்றையும் ஒழிப்போம்
குற்றம்... கொடுமைகளை
குழிதோண்டி புதைப்போம்
பிறகு வாருங்கள்...
எல்லோருமாய் கூடி
இருக்கும் சுதந்திரத்தை
இன்பமயமாய் சுவைப்போம்..!
நன்றி யூத்புல் விகடன்:
http://youthful.vikatan.com/youth/india63/KRamesh15082009.asp

Thursday, July 30, 2009
செவிலித் தாய்...
ஒவ்வொரு மகவும்
உலகம் அறியா அதிசயம்...
கை மடக்கி விரல்சூப்பி
கண்ணயர்ந்த நிலையை பார்க்க
கண்கள் நூறு வேண்டும்...
முதல் அழுகை
முதல் புன்னகை
முதல் கோபம்
முதல்களில் எவ்வளவு ஆனந்தம்...
பசியெடுத்து அழும்போதும்
குஷிவந்து சிரிக்கும்போதும்
கன்னக்குழி வரையும் ஒவியத்தை
காலமெல்லாம் மனது ரசிக்கும்...
பஞ்சு போன்ற மென்பகுதியில்
பதித்து போடும் ஊசிக்கு
உதடு சுழித்து வரும் அழுகைக்கும்
ஓராயிரம் அர்த்தம் இருக்கும்...
புரியாத போதும் நாம்
அசையும் அசைவுக்கு
பொக்கைவாயால் பூக்கும் புன்னகையில்
பூமிகூட தலையை அசைக்கும்...
சொல்ல அளவில்லா இன்பங்களோடு
இத்தனை குழந்தைகளோடு
இன்பமாய் இருந்த போதும்
இதயநோயினால் இழந்த
என் ஒரே மகவை நினைக்கையில்
எதுவுமே இல்லாதவளாகி போகிறேன்..!
நன்றி யூத்ஃபுல் விகடன்: இந்த படைப்பு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது (27-07-2009).

கருணையை இழக்கிறதா மனித இனம்..?
சென்னை போன்ற பெருநகரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது சாதரணம்தான் என்ற போதும் என் மனத்தினை உறுத்திய நிகழ்வுகளை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நிகழ்வு - 1 : இது சமீபத்தில் நடந்த நிகழ்வு. நான் அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் செல்லுவதுதான் வழக்கம். 2 தினங்களுக்கு முன்னரும் அப்படித்தான் பேருந்தில் ஏறினேன். கூட்டம் மிகுதியால் பயணசீட்டு எடுப்பதற்கு 5 ரூபாய் பணத்தை பெண்மணி ஒருவரிடம் கொடுத்து அனுப்பினேன் (கூட்ட நெரிசலில் பேருந்து பயணத்தில் சிலர் உதவி மனப்பாண்மையோடு கொடுத்தனுப்பி டிக்கெட் வாங்கிக் கொடுப்பது நல்ல ஒரு விஷயம்) அந்த நேரத்தில் நிறைய நபர்கள் கொடுத்தும் வாங்கியும் கொண்டிருந்தனர். எனது சீட்டு தவறுதலாக என்னை கடந்து முன்னாடி நின்றவர்களிடம் கொடுத்துவிட்டார்கள். வாங்கியவர்களில் ஒருவர் காசு கொடுக்காமலே சீட்டை பெற்றுக் கொண்டிருக்கிறார். எனக்கு சீட்டு வரவில்லை.
நான் அந்த பெண்மணியிடம் கேட்க, அவர் இன்னொருவரிடம் கேட்க, அவர் கொடுத்த காசுக்கெல்லாம் சீட்டு வந்துவிட்டதாக சொன்னார். அவரும், நானும் "முன்னாடி கொடுத்தவர்களிடம் சீட்டை சரிபாருங்கள் அதிகமாக இருந்தால் கொடுங்கள்." என்று நின்ற நபர்களிடம் வேண்டினோம். முன்னாடி நின்ற யாரும் திரும்பிக் கூட பார்க்க மனமில்லாதவர்களாய் நின்று கொண்டிருந்ததை கவனிக்கையில் வேதனையாக இருந்தது. அதிலும் அங்கே இருந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
எனது வேதனைக்கான காரணம்... 5 ரூபாய் அல்ல; ஆனால், அதற்கே நாட்டின் தூண்கள் எனப்படும் இளைஞர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாய் இருக்கிறதே...? அவர்கள்தான் வைத்திருப்பார்கள் என்று குற்றம்சாற்ற விரும்பவில்லை. குறைந்த பட்சம் தங்களது சீட்டினை சரிபார்த்திருக்கலாம் அல்லது வேறு யாரவது வைத்திருக்கிறீர்களா என அருகில் உள்ளவர்களிடம் கேட்டிருக்கலாம். ஒரு சிறு தவறு நடந்திருக்கிறது. இதனைக் கேட்ககூட மனமில்லாதவர்கள் போல இருப்பவர்களை கண்டுதான் மனம் புழுங்குகிறது.
என்னிடம் சீட்டு வாங்க காசு வாங்கிய பெண்மணி என்னிடம் மன்னிப்புக் கோரினார். அவர் மீது எந்த தப்பும் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. எத்தனையோ பேர் இந்தப் பிரச்னைகளுக்காவோ என்னவோ எவ்வளவு கூட்டம் இருந்தாலும் காசு
கொடுத்து அனுப்பும் போது முகத்தை திருப்பிக் கொண்டு கண்டுகொள்ளாதவர்கள் போல் இருப்பார்கள். இப்பொழுது பிரச்னை என்னவென்றால், உதவி செய்யும் அவரைப் போன்ற நல்லவர்கள் நமக்கேன் வம்பென்று ஒதுங்கிக் கொள்ளதானே தோன்றும்.
நான் அவரை சமாதானப்படுத்தி இன்னொரு சீட்டு வாங்கிக் கொண்டேன். இதே போல் இன்னொரு நிகழ்வை அவர் பார்க்க நேர்ந்தால், சந்திக்க நேர்ந்தால் அங்கே சிறிய உதவி என்றாலும், அந்தப் பெண்ணின் கருணை மனப்பாண்மையை மனித இனம் இழந்துவிடும்தானே..?
நிகழ்வு - 2 : நான் அலுவலகம் முடிந்து சென்று கொண்டிருந்த சமயம் ஓர் இளைஞர் என் அருகே வந்தார். "அண்ணா ஒரு பதினாறு ரூபாய் கொடுங்கள். நான் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்தேன். என்னை ஆய்வாளர்கள் பிடித்து காவல் நிலையத்தில் வைத்துவிட்டார்கள். அதோடு இருந்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு விட்டார்கள். நான் ஊருக்கு போக பணம் இல்லை," என்றார்.
எனக்கு அந்த நேரத்தில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. அதோடு கையில் பிரபல அரசு கல்லூரிக்கான அடையாள அட்டையும் வைத்திருந்தார்.
"சரி என்னிடம் இப்போது சில்லறை இல்லை... மாற்றி தருகிறேன்," என அழைத்துச் சென்றேன். போகும்போதே என் மனம் பல்வேறு கேள்விக்கனைகளை தொடுத்தது. (ஒருவேளை அந்த நேரத்தில் சில்லறை இருந்திருந்தால் எடுத்து கொடுத்திருப்பேன்... பிறகு யோசனை செய்திருப்பேன்)
* இவர் உண்மையிலேயே பிரச்னையில் இருக்கிறாரா?
* ஏமாற்றுபவரா? அப்படியானால் நாம் ஏமாற போகிறோமா?
இப்படி பல கேள்விகள் என் மனதில் எழுந்ததற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
சமீபத்தில் இதே போல் நண்பர் ஒருவர் ஏமாந்த அனுபவத்தை அறிந்தது ஞாபகத்துக்கு வந்தது. ஒரு குடும்பமே இதேபோல் தினமும் ஏமாற்றுவதை அந்த வழியில் நான் கண்டிருக்கிறேன். ஒரு வயது முதிர்ந்தவர், அவர் மனைவி, நடுத்தர வயதுள்ள ஒருத்தர், அவரது மனைவி மற்றும் ஒரு சின்னபெண், அவருக்கு 10ல் இருந்து 14க்குள் வயது இருக்கலாம். அந்த சின்னப் பெண்ணை சில சமயம் அந்த வயதானவருடனும், சில சமயம் நடுத்தர வயதுடையவர்களிடமும் பார்க்கலாம்.
இவர்களது வேலையே இரவு தொடங்கும் வேளையில் பேருந்து நிலையதுக்கு அருகில் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் "நாங்கள் பணத்தை தொலைத்துவிட்டோம் ஊருக்கு போக பணம் இல்லை உதவி செய்யுங்கள்," என கேட்பதுதான். பலர்
கண்டுகொள்வதில்லை. சிலர் அவர்களிடம் கருணை உள்ளத்தோடு பணத்தை கொடுக்கின்றனர். இவர்கள் இந்த ஏமாற்று வேலையையே தொழிலாக செய்கின்றனர். இவர்களை மாதத்தில் குறைந்த பட்சம் மூன்று முறையாவது நான் பார்த்திருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்கூட ஒரு பெண் கையில் தேடி எடுத்து 50 ரூபாயை கொடுத்ததை நான் காண நேர்ந்தது. நான் அந்த பெண்மனியிடம் எடுத்துச் சொல்லவும் முடியவில்லை... அவரை தடுக்கவும் முடியவில்லை.
உண்மையிலேயே நான் அந்த பையனுக்கு செய்த சிறிய உதவியை நினைத்து சந்தோஷபடுகிறேன். அதே சமயம் என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்றும் தெரியவில்லை. 50 ரூபாய் கொடுத்த பெண்ணின் கருணை உள்ளம் இங்கு கேள்விக்குறியாகிப் போனதை நினைத்து வருந்துகிறேன். ஒருவேளை அவருக்கு அது ஏமாற்று வேளை என்று தெரிந்தால் உண்மையிலேயே உதவி தேவைப்படும் ஒருவர் கருணையை இழக்க நேரிடத்தானே செய்யும்.
இப்படி நடக்கும் நிகழ்வுகளை வைத்து கொஞ்சம் இருக்கும் கருணை குறையத்தானே வாய்ப்பிருக்கிறது. மனித இனம் எவ்வளவோ மாற்றம் நிகழ்ந்தாலும் அன்பு, உதவி, பகிர்தல் என சில மாறாத குணங்களால் தான் நிலைத்திருக்கிறது என தோன்றும். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தால் அடுத்த தலைமுறைக்கு நாம் எதனை எடுத்துச் சொல்லப் போகிறோம்? வெறும் எச்சரிக்கை உணர்வை மட்டும்தானா?
நன்றி யூத்ஃபுல் விகடன்: இந்த படைப்பு யூத்ஃபுல் விகடனில் சமீபத்தில் வெளிவந்துள்ளது.(21-07-2009)

Tuesday, June 30, 2009
கருவறை தின்ற கரு.......
நன்றி தமிழ்மன்றம்:
தமிழ்மன்ற கவிதை போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20303
முலை பால் குடித்து
முன்னேற்றம் அடைந்தவன் - அவள்
தோல் சிறுத்து இருக்கும்போது
வாய்சோறு தரமறுக்கும் பிள்ளை... தாய்மை எனும்
கருவறை தின்ற கரு....!
பிச்சையாய் பெற்றேணும்
இச்சையை தீர்த்துக்கொண்டு
மிச்சத்தை தூக்கி எறியும்
காதலர்கள்... காதல் எனும்
கருவறை தின்ற கரு....!
குருவிகளையும் பறவைகளையும்
குறைந்து போக வைத்து
அலை கோபுரங்களை பெருகவிட்ட
அறிவியல்... இயற்க்கை எனும்
கருவறை தின்ற கரு...!
மழலை கொன்று
மனிதம் தின்று
மண்ணை வென்றதாய்
மார்தட்டும் மாக்கள்... மக்கள் எனும்
கருவறை தின்ற கரு....!
உரிமையை நிலைநாட்டும்
ஒரு மை விரலுக்கு
பத்து விரல் நீட்டி
பணம் பெற்றோர்... உரிமை எனும்
கருவறை தின்ற கரு....!
மும்பை தாக்குதல்
முல்லைதீவு கொடூரம்
காஜா படுகொலைகள்
அன்பெனும் உலகம்.... மனிதம் எனும்
கருவரை தின்ற கரு....!
கருவரை தின்னும் கருக்கள் மாறட்டும்
கருப்பையில் நின்று ஒன்று சேரட்டும்
உலகின் உன்னதம் வளர்க்கும்
லட்சிய மகவாய் மாறட்டும்....!
கருப்பை போற்றும்
கவின்மிகு உறவாய் வாழட்டும்...!!

யு(பு)த்தம்....?
வெளியான கவிதை:
நன்றி மாலைமலர் இணையதளம்:
http://www.maalaimalar.com/Articles/DetailedInteractive.aspx?iDId=285
யு(பு)த்தம்....?
செல்லடிகளால் எம்மக்கள்
சிதையுறும் போது
எதிரிகளின் மீதுகூட இனம்புரியா
சீற்றம்தான் வருகிறது
சொல்வருடி அவர்களை - நீங்கள்
தூக்கும் போது
எம் இனத்தை என்னி
துக்கம் தொண்டை கவ்வுகிறது....
இனத்திற்க்குள்ளே பெருச்சாளிகள் உங்களுக்கெதிராய்
இனப்பெருக்கம் செய்யும்போது
ஈழத்தை உனக்காக
இரவல் கேட்பது முட்டாள்தனம்....
விழிநீர் விட்டாலே
வேதனை படும் என் கூட்டமே
நம் இனம் அங்கே
உதிரம் விட்டு
உருக்குழைந்து போகிறதே
உன் பங்குதான் என்ன...?
மகிழுந்து தேடி
பயணம் செய்யும் - என்
மண்ணுலக வாசிகளே
மரங்களினூடே வாழும் - எம்மக்கள்
மனசு தேடி போகமாட்டீரோ...?
குரோசிமாவில் கூட
ஒரே மூச்சில் குண்டெறிந்து
உருக்குழைத்து போனார்கள்
ஆனால் நீங்கள் - இங்கே
கொஞ்சம் கொஞ்சமாய்
குறிவத்து கொன்று எரிக்கிறீர்கள்...!
மண்ணிழந்து ,வீடிழந்து
மழையோடும், வெயிலோடும்
உயிர்மட்டும் சுமந்து செல்லும்
ஒன்றுமறியா மக்களின்
உதிரம்தான் வேண்டுமா...?
ஏன் இந்த கொடூரம் உங்களுக்கு
நிறைமாத கற்ப்பினியை
நிரடலற்று புணர்தல் போல....?
குழந்தைகளின் தலை நோக்கி
துப்பாக்கி குழல் நீட்டும்
உங்களிடத்தில் போய்
இரக்கத்தை கோருவது
இறந்தவனிடத்தில்
இரவல் கேட்பதற்க்கு சமர்.....!
குழந்தைகளையும்
முதியோரையும்
கொன்று குவிக்கும்
யுத்தத்தை தொடர்ந்து கொண்டு
நாங்கள்
புத்தன் பிறந்த பூமியென்றும்
நீங்கள்
புத்தம் வளர்த்த பூமியென்றும்
பூரிப்பு அடைவதில்
புண்ணியம் ஒன்றும் இல்லை...!!

மாறுவது எப்போது...?
மாறுவது எப்போது...?
(முகவைமுரசு வார இதழில் வெளிவந்த கவிதை - ஆகஸ்ட்-31 to செப்டம்பர்-6,2001)
உழைப்பு என்பதே தெரியாமல்
உறங்கி பொழுதை கழிக்கும்
முதலாளி வர்க்கம்...
ஓய்வு என்னவென்று தெரியாமல்
உடலை வருத்தி உழைக்கும்
உழைப்பாளி வர்க்கம்...
மகத்துவம் செய்யப்பட வேண்டிய
மதங்களையும்,ஜாதிகளையும்
வதம் செய்து வாழும்
வகுப்பு தலைவர்கள்...
உதிரம் குடித்தேனும்
ஓட்டுப்பெற்று ஒளிந்து கொண்ட
அரசியல் கூட்டம்...
அன்பு எனும் மருந்தை
அதிபாதாளத்தில் வீசிவிட்டு
அடிதடியை நாடும்
ஆக்ரோசமான களையர் கூட்டம்...
காதலின் புனிதம் அறியாமல்
கன்னியரை கலங்க வைக்கும்
"ஈவ்டீசிங்கை" கையில் எடுக்கும்
இளைஞர் கூட்டம்...
எந்த ஒரு செயலுக்கும்
எளிதாக லஞ்சம் கேட்க்கும்
எங்கள் அரசு ஊழியர்கள்...
இவர்கள் எல்லாம் மாறுவது எப்போது...?
நாம் மகத்துவம் பெறுவது எப்போது...?

Monday, January 26, 2009
இனியும் வேண்டாம்...
(குஜராத் பூகம்பத்திற்க்கு நினைவு அஞ்சலி)
(பரமக்குடி முகவைமுரசு வார இதழில் வெளிவந்த கவிதை - ஜனவரி 25 to 31,2002)
குடியரசு தினத்தில்
குதூகலம் கொண்ட மனங்களில்
கோரமான சோகம்...
கட்டிடங்கள் சிறு
கற்களான கொடுமை...
கொடியேற்றிய சிறார்கள்
கோரமான கொடுமை...
மக்கள் வசித்துவந்த புஜ்
மயானமான கொடுமை...
அழகாய் இருந்த குஜராத்
அழிந்த ஒரு கொடுமை...
அன்பிற்க்கினிய இந்தியா
அழுத ஒரு கொடுமை...
அழத்தான் செய்தோம்...!
தம்பியை தேடும்
சகோதரிகள் இருவர்
"சஞ்சீ" என்று அழுதபோது...
மடியினில் மகனை வைத்து
மாயமாய் தன் உயிர் போனபோதும்
மகனை காப்பாற்றிய - அந்த
மகர ஜோதியை நினைத்த போது...
குடிசைகள் எல்லாம்
அழிந்த பின்னும்
கை குழந்தையோடு - அந்த
கோரத்தை பார்த்து கொண்டிருந்த
சகோதரனை பார்த்தபோது...
பத்துமாடி பணக்காரன் நேற்று
பைசா இல்லை
பிச்சைக்காரன் இன்று
பசிக்கிறது சாப்பாடு கொடு - என்ற
பெரியவரை பார்த்தபோது...
ஆறுதல் பட்டோம்...!
மனித நேயத்துக்கு ஏதடா மதம் என
மக்களுக்கு இரத்தம் தந்த - அந்த
முஸ்லீம் சகோதரர்களை நினைத்தபோது...
மதமும் இல்லை...
ஜாதியும் இல்லை...
மாற்றம் இயற்க்கை கையில்
மாறிய மக்களை பார்த்தபோது...
புதையுண்டது புஜ் ஆனாலும்
இழந்தது எங்கள் தேசம் என
இந்தியாவே அழுது
ஆதரவு தந்தபோது...
இயற்க்கை தாயே...!
அழித்தது போதும்
ஆதரவு கொடு...!!
பூமியை சிதைத்தது போதும்
புன்னகைத்து முத்தம் கொடு...!!
இனியும் வேண்டாமே...
எங்களால் முடியாது
இன்னொரு துயரத்தை தாங்க...!!

புதியதாய் ஒரு பூமி வேண்டும்...!
என் ஈழத்து சகோதரன்
எழுந்து நடக்க
ஏகதிபத்திய சுதந்திரம் வேண்டும்....!
ஆப்பிரிக்க நாடுகளில் வறுமை
அறவே இல்லையெனும்
அண்மை தகவல்கள் வேண்டும்....!
பயங்கரவாதம் தெரியாத
பண்பட்ட நேசத்தை
பங்காளி தேசங்கள் பகிற வேண்டும்...!
சாதிமத சாக்கடைகள் நீங்கி
சமத்துவ ஆறு
சங்கமித்தல் வேண்டும்...!
குண்டுகள் தொடுக்கும்
கொடூரர்கள் மறைந்து
அன்பு தொடுக்கும் நண்பர்கள் வேண்டும்....!
உலக கணினி செய்வோரையும்
உண்ண கழனி செய்வோரையும்
ஒரே சமராக பாவிக்க வேண்டும்...!
பணங்களுக்காக வாழும்
பச்சோந்தி மனிதர்கள் மாறி - நல்
மனங்களுக்காக வாழ வேண்டும்...!
பூலோகம் தழைத்தோங்க - இந்த
புயலான மாற்றங்கள் கொண்ட

சந்தோசம்...!
சந்தோசம்...
ஒவ்வொரு மனிதனும்
வேண்டுவது... விரும்புவது...
பிறருக்கு கிடைக்கும் சந்தோசத்தை
தடுப்பது சந்தோசமல்ல...
சந்தோசம்...
மனதின் கரியம்...
நாமெல்லாம்...
ஆசைபடுவதையும்
ஆசை படுகிற விஷயம்
அடைவதை சந்தோசம் என்கிறோம்...
சந்தோசம் என்பது
குதூகலம்..
குதூகலம் என்பது
மனமலர்ச்சி
மனமலர்ச்சி என்பது
கள்ளமில்லா சிந்தனை
கள்ளமில்லா சிந்தனை என்பது
பிறரை நேசித்தல்
பிறரை நேசித்தல் என்பது
மனம்விட்டு பேசுதல்...
சந்தோசம் என்பது அன்புசெய்தல்
சந்தோசம் என்பது பகிர்ந்து கொள்ளுதல்
அன்பு என்பது அமுத சுரபி
அமுதசுரபி அள்ள அள்ள குறையாது...
அன்பு...
காசு பணம் கொடுத்தால் குறையும்
ஆனால்
காணமுடியாத அன்பை கொடுத்தால்
குறையாது..
பத்தாய் திரும்பி வரும்...!
அன்பு
அன்பின் உறவு
இதயத்தின் வரவு
அன்பு பாலைவனம் ஆகாது
அது எப்போதும் பூக்கும் சோலைவனம்
அதில்
மகிழ்ச்சி தேன் உண்ண
மனிதவண்டுகள் வந்துகொண்டே இருக்கும்...
வாழ்க்கை சிறக்கும்
வசந்தம் பிறக்கும்...!
ஒவ்வொரு மனிதனும்
வேண்டுவது... விரும்புவது...
பிறருக்கு கிடைக்கும் சந்தோசத்தை
தடுப்பது சந்தோசமல்ல...
சந்தோசம்...
மனதின் கரியம்...
நாமெல்லாம்...
ஆசைபடுவதையும்
ஆசை படுகிற விஷயம்
அடைவதை சந்தோசம் என்கிறோம்...
சந்தோசம் என்பது
குதூகலம்..
குதூகலம் என்பது
மனமலர்ச்சி
மனமலர்ச்சி என்பது
கள்ளமில்லா சிந்தனை
கள்ளமில்லா சிந்தனை என்பது
பிறரை நேசித்தல்
பிறரை நேசித்தல் என்பது
மனம்விட்டு பேசுதல்...
சந்தோசம் என்பது அன்புசெய்தல்
சந்தோசம் என்பது பகிர்ந்து கொள்ளுதல்
அன்பு என்பது அமுத சுரபி
அமுதசுரபி அள்ள அள்ள குறையாது...
அன்பு...
காசு பணம் கொடுத்தால் குறையும்
ஆனால்
காணமுடியாத அன்பை கொடுத்தால்
குறையாது..
பத்தாய் திரும்பி வரும்...!
அன்பு
அன்பின் உறவு
இதயத்தின் வரவு
அன்பு பாலைவனம் ஆகாது
அது எப்போதும் பூக்கும் சோலைவனம்
அதில்
மகிழ்ச்சி தேன் உண்ண
மனிதவண்டுகள் வந்துகொண்டே இருக்கும்...
வாழ்க்கை சிறக்கும்
வசந்தம் பிறக்கும்...!
Subscribe to:
Posts (Atom)