Friday, November 26, 2010

வீரவணக்கம் ....!

26/11 மும்பை தாக்குத‌ல்

வருடங்கள் இர‌ண்டு நகர்ந்தது
வாழ்க்கையும் நகர்கின்றது
நீங்கள் விட்டு சென்ற
தடயங்கள்...தாகங்கள்...
இன்னும்...இன்னும்...என்றும்
நகர்வதில்லை தோழர்களே....

கொடுத்தீர்க‌ள் உயிரை எங்க‌ளுக்காக‌ - வ‌ந்த‌
கொடுங்கோல‌ன் இன்னும் இருக்கையிலே...
த‌டுத்தீர்க‌ள் பாதிப்பை நாட்டுக்காக‌
த‌ர‌மில்லா ம‌னித‌ர்க‌ளின் மூர்க்க‌த்தினாலே‌...

இழ‌ப்புக‌ளை எங்க‌ள் ப‌க்க‌ம் வைத்துக்கொண்டு
எதிரிக்கு இர‌ண்டு கோடிக‌ளை செல‌வ‌லிக்கிறோம்
புரட்சிகர மாவீரர் உங்க‌ளுக்கு
புண்ணிய‌மாய் என்ன‌ செய்தோம்...?

த‌ழும்புகளை த‌ங்க‌மாக‌ ஏந்திக்கொண்டு
விளிம்புக‌ளில் வீர‌ம‌ர‌ண‌ம் அடைந்தோரே...
நினைவுக‌ளில்... நேச‌ங்க‌ளில்... என்றும்...
எம்மை விட்டு எங்கும் நீங்க‌மாட்டீர் தோழ‌ர்க‌ளே...!

க‌ர்க‌ரே..காம்தே...கம்ப்ளே..சலாஸ்கர்...சந்தீப் - என‌
க‌ள‌ப்ப‌ட்டிய‌ல் நீண்டு இருக்கிற‌து...
காவிய நாய‌க‌ர்களே உங்க‌ள் நினைவுக‌ள்
க‌ண்ணீராய் எங்க‌ளோடு க‌ல‌ந்தும் இருக்கிற‌து...!

உயிரின் சுவாசத்தை நாட்டிற்காய்
ஒப்புவித்து கொடுத்தோரே - உங்களுக்காய்
உண்ர்வுகள் ஒன்றுபட்டு ஒற்றுமையாய் சொல்லுகிறோம்
உளமார்ந்த வீரவணக்கம்...!!

Monday, November 15, 2010

குடிமகனார்கள் ஜாக்கிரதை.....!

எழுதனும்னு நினைக்கும் போது நேரமில்லமை அது இதுனு ஏதவது ஒரு காரணத்தினாலே முடியாம போயிடுது சரி எழுதுவோம் எதையவதுனு கணினி முன்னால அமர்ந்தேன் என்ன எழுதலாம்னு நெனைக்கிறப்போ படிச்ச செய்தியும் நேத்து பாத்த இடமும் நினைவுக்கு வர இத எழுத ஆரம்பிச்சாச்சு.....

படித்த‌செய்தி :தீபாவளிக்கு "மதுபான‌கடை"யில் பயங்கர கூட்டம்: ரூ.300 கோடிக்கு மேல் சரக்கு விற்பனை

பார்த்த காட்சி :ஒரு "மதுபான‌கடை" பக்கத்தில் கழிப்பறை கட்டிடம் இல்லாத கழிபறையில் புரண்டு கிடந்த குடிமகனார்.

எதுவுமே ஒரு அளவுக்கு மேல போனா நமக்கு போதை அதிகம் ஆயிடுறது சகசம்தான் ஆனால் போதையே அளவுக்கு அதிகமா போனால் என்ன செய்வது.மனிதன் நிலைகுலைந்து தன்னை மறந்து தரையை மெத்தையாவும் கழிவுகளை வாசனையாகவும் ஏத்துகிட்டு மூச்சு இருக்கா இல்லையானு தெரியாத அளவுக்கு கிடந்த நான்பார்த்த அந்த மனிதரை போல கிடக்க வேண்டியதுதான்.அப்படி என்னத்த நான் பாத்துட்டேனு கேள்வி கேக்குறீங்களா இதோ இதுதாங்க நடந்தது....

நான் தினமும் போய் வரும் வழியில் ஒரு மதுபான‌கடை(அங்க மட்டும்தான் இருக்கானு கேக்குறவுங்க மண்ணிச்சுகோங்க எங்கெங்கு இருக்கோ அங்கேயெல்லாம் அப்பிடிதான்னு நினைக்கிறேன்) தினம் நான் போகும்போது மூக்கை பிடிக்காம நடந்து போறதுங்கிறது அவ்வளவு எளிதான காரியம் இல்ல அந்தளவுக்கு நாற்றம்,யாராவது சரக்குதான் அந்த அளவுக்கு வீசுதுனு தப்பா நெனெச்சிடாதீங்க அது சரக்க அடிச்சுட்டு குடிமகனார்கள் விட்டு செல்லும் சரக்குகள்.எல்லா விற்பனை நிலையங்களுக்கு அருகிலேயும் இப்படிபட்ட திறந்தவெளி கழிப்பிடங்களை காண முடியும்.அப்படி பட்ட இடத்துல உச்சகட்ட உற்சாகத்தில ஒருத்தர் படுத்து உருண்டுவருகிறார் வேறென்ன சொல்ல.....

மூனு மணிநேரம் கடையில உக்காந்து மூச்சுமுட்ட குடிக்கிறது வெளில வந்ததும் வெளியெத்தி விட்டுறது,மூனு மணி நேரம் பொருத்த நீங்க கொஞ்சம் கழிப்பிடம் தேடிபோய் வெளியேற்றலாம் இல்லியா?.குடிமகனார் யாரையும் நான் குற்றம் சொல்றேன்னு தப்பா எடுத்துகாதீங்க ஏன் நான் சொல்றேனா நீங்களே உற்ச்சாக மிகுதியில அதில உருண்டு புரள வாய்ப்பிருக்குதில்லையா நான் பார்த்த அந்த நபரைபோல நீங்களும் ஒருநாள்...(!) அதனால உங்க சுற்றத்தை நீங்கதான் சுத்தமா வெச்சிருக்கனும் முடிஞ்ச அளவு சுத்த‌மா வெச்சுகோங்க‌… இல்ல குறைந்த பட்சம் நீங்க‌சுத்த‌மெல்லாம் ப‌ன்னா‌விட்டாலும் அசுத்த‌ம் ப‌ன்னாம‌இருங்க‌ள்.நீங்க‌ளும் த‌ப்பிப்பீர்க‌ள் அடுத்த‌வ‌ர்க‌ளும் த‌ப்பிப்பார்க‌ள்.....

இப்போதெல்லாம் நம் மக்கள்,முக்கியமா நம்ம இளைஞர்கள் ரொம்பபப‌... முன்னேறிட்டாங்க ஒரு பொண்ணு பாத்துட்டா,பரீச்சையில தேர்ச்சி/தோல்வி அடைஞ்சா, உடம்புல அடிபட்டா ,சம்பளம் வந்தா,அலுவலகத்தில மேளாளர் பாராட்டினா/திட்டினா,காலைல சீக்கிறம் எழுந்தா,மூச்சா போகலைனா கூட... கொண்டாடனும்…... கொண்டாடனும்…...அதுதான் குறிக்கோள்….. அதுக்கு ஒரே ‘ம(வி)ருந்தா’ இதை எடுத்துக்கிறாங்க....

இப்பொதெல்லாம் எதுக்கெடுத்தாலும் ஒரு காரணம் சொல்லிட்டு குடிக்கிறது வழக்கமா போயிடுச்சு,குடிங்க அது உங்களோட சுதந்திரம்...விருப்பம்...அதுலயும் முக்கியமாக நாட்டோட வருமானத்துல உங்களோட பங்கு ரொம்பவும் முக்கியம் ஆகவே குடிமகனார்களே குடிங்க ஆனா யாருக்கும் பாதிப்பு வராம பாத்து குடிங்க(உங்களையும்தான் சேர்த்து சொல்றேன் உங்களுக்கும் பாதிப்பு வராம பாத்துக்கோங்க‌). உங்களுக்கு அறிவுறை சொல்ற அளவுக்கு நான் பெரியவன் இல்லை (மப்புல இருக்குற ஒருத்தரை அறிவுறை சொல்லிட்டு தப்பிச்சுட முடியுமா என்ன?)

இந்த விசயத்துல கிராமம்/நகரம் அப்படி எந்த பாகுபாடும் இல்லீங்க எல்லாருமே இப்பொ அதுக்கு அழையாத விருந்தாளியா இருக்கங்க.இப்போ எல்லாம் வீட்டுல நடக்கிற நல்ல ஒரு நிகழ்ச்சிக்கு போனாகூட அதுவும் ஒரு விருந்தா தனியா இருக்கு.இதற்கெனெ நிதிநிலை அறிக்கை கூட தாயரிக்கிறாங்க எல்லா செலவோடையும் இதுக்கும் தனியா ஒரு தொகை ஒதுக்கி விடுகிறார்கள்.யாராவது கலந்துக்காத ஆட்களையும் புடிச்சி தம்பி இது குளிர்பாணம் மாதிரிதான் தம்பி… ஒண்ணும் செய்யாது சும்மா சாப்பிடுங்கனு உசுப்பெத்தி விடுராங்க... ம்ம்ம் என்ன பன்றது காலம் 'குடி'காலம் ஆயிபோச்சு....

இப்படித்தான் நான் தங்கி இருந்த அறை நண்பர்கள் ஏதாவது ஒரு காரணம் சொல்லி கையில பையோடு வரும்போதெல்லாம் கொஞ்சம் பயமாகவே இருக்கும்.இவங்க காலைல முழிச்சு போற வரைக்கும் வாந்தி(இதுக்கு ஆப்‍‍பாயில் னு பேரு வேற‌) எடுக்காம இருக்கனுமே அப்படிங்கிற நினைப்புலேயே பாதி தூக்கம் போயிடும்.அவங்களுக்கு எதுவுமே தெரியற‌து இல்ல சுயநினைவு இருக்குற வரைக்கும் ஏதாவது ஒரு தலைப்பு எடுத்து பேசுறது(உண்மையிலேயெ ரொம்ப நல்லவங்களாக மாறிடறாங்க...).அதுவரைக்கும் சண்டை போட்டு பேசாதவன்கிட்ட கூட நீ என் நண்பேண்டா... னு வசனம் பேசுறது இப்படி பல நகைச்சுவைகள் நடக்கும்.கொஞ்சம் உச்சம் அடைஞ்ச உடனே ஒரு சின்ன சத்தம் கேக்கும் உவ்வேனு... பக்கத்துல இருக்கிறவன் எச்சரிக்கையா இருக்கனும் இல்லை அவ்ளோதான்.வேறென்ன அந்த இடமே நாறிபோயிடும் அதன்பிறகு அறையை சுத்தபடுத்துறதில இருந்து அவர்களை கழுவுறது வரைக்கும் தெளிவா இருக்குற யாரவதுதானே பண்ணனும் இப்போ புரியுதா ஏன் பயப்படனும்னு.

இதவிட ஒரு பெரிய நகைச்சுவை நடந்துச்சு,இப்ப்டித்தான் ஒருநாள் உச்சகட்ட உற்ச்சாகத்தில் உவ்வேவே போயிட்டு நல்லா அவன் தூங்கிட்டான் நாங்க எல்லா சேவைகளையும் செய்துட்டு தூங்க முடியாம நேரம் கழிச்சு தூங்கி எழறதுக்கு கொஞ்சம் நேரம் ஆயிட்டுது.அவன் எப்ப‌டியோ சீக்கிறமாகவே எழுந்துட்டான் எழுந்தவன் எல்லோரையும் எழுப்பி திட்டுனா திட்டு அவ்ளோ திட்டு திட்டுறான் என்ன காரணம்னு கேக்கலையே மக்கா..?

யாரோ வாந்தி எடுத்துட்டாங்களாம்... ஒரே வீச்சமா இருக்காம்...ஏண்டா குடிக்கிறவன் ஒழுங்கா குடிக்கிறதில்ல ஏண்டா இப்படி வாந்தி எடுத்து தொலைக்கிறீங்க னு கேள்வி வேற...(?!)

என்ன கொடுமை மக்கா..?

நீதாண்டா வாந்தி எடுதவன்னு சொன்னா அவன் நம்பவே இல்ல கடைசி வரைக்கும். எனக்கும் இதுவரைக்கும் நம்பவே முடியலைங்க அவன் உண்மையிலேயே பேசுனானா இல்ல தெரிஞ்சுதான் அப்பிடி பெசனும்னு பேசுனானா?

மப்பில்லாத நேரம் பாத்து பதில் சொல்லுங்க மக்கா.....:)

Friday, May 28, 2010

நீ வேண்டும்...!

நன்றி:வார்ப்பு

நீ வேண்டும்...!
---------------------


இரவு நேரத்து பவுர்ணமி போல்
இதய தேசத்தில் நுழைந்தவளே...

ஒற்றை அன்றில் பறவை என்னை
உறவு கொடுத்து முழுமைபடுத்தியவளே...

வேஷங்கள் நிறைந்த இவ்வுலகில் என‌க்கு
வெளிச்ச புள்ளியாய் வ‌ந்த‌வ‌ளே.

குழந்தையாய் மாறும் கடைசி காலங்களிலும்
கூடி நீ என்னோடு தவள வேண்டும்
உன் வாய் ஒழுகும் சிறு உண‌வெடுத்து
உன்னோடு உண்டு நான் மகிழவேண்டும்...

இருப்பதெல்லாம் ஒன்றும் வேண்டாம்
இல்லையென்ற உன் அன்பு வேண்டும்.
என் வாழ்க்கை முடியும் வரை
என்னில் பாதியாய் இல்லை
எனக்குள் முழுமையாகவே நீ வேண்டும்...!



குறையாத‌ நேசம்....
----------------------


கையளவு உணவைகூட‌
கைகள் ஒன்றுகூடி
களிப்போடு உண்டு முடித்து
பசியை
அன்பால் நிரப்பிக் கொள்ளும்
அற்புதம் நிறைந்ததுதான் நட்பு...

சில்லரைகள் பெருகிபோனதால்
சேர்த்து வைத்த‌ நேசங்கள்
சிதறுகின்ற போதும்
கல்லரை சேரும்வரை கூட‌
கைகோர்த்து வரும்
கள்ளமில்லா நேசம்தான் நட்பு....

இன்பத்தை இரட்டிப்பாக்குவதும்
இதயத்தை தித்திப்பாக்குவதும்
துன்பத்தை துடைத்து போடுவதும்
துயரங்களை சருகாக்குவதும்தான்
தூய்மை கொண்ட நட்பு...

தேவைகள் நிறைந்த‌
வியாபார உலகத்தில் புதியதாய் பல‌
பொய்கள் சொன்னாலும் - நட்பெனும்போது
உண்மையை மட்டுமே
உரக்கச் சொல்வது நட்பு...

காலங்களின் சூழ்ச்சியில்
கண்பார்க்க முடியாவிட்டாலும்
உறவுகளின் நேச‌ சுழ‌ற்ச்சியில்
உற‌வாட‌ முடியாம‌ல் போனாலும்
இதய க‌ருவ‌ரையில்‍ எப்போதுமே
இருக்கும் குழ‌ந்தைதான் ந‌ட்பு...

நேற்று இன்று நாளை என‌
நெடுந்தூரம் சென்றாலும்
காற்று வாங்கி களைத்திருக்கும்
கருமைமிகு வானம் க‌ளைந்தாலும்
சேர்த்து வைத்த‌ உற‌வுக‌ள்
சித‌றியே போனாலும் நமக்கு
குறையென்று தெரிந்தால்
கூடவே வரும் கோடி ந‌ட்புக‌ள்தான்
என்றுமே நமக்கு குறையாத நேசம்....!!

http://www.vaarppu.com/view/2062/

முடிந்துபோன பாதை

எமக்கு...
வலிமையான கால் இருக்கிறது
வழி செய்யும் தோள் இருக்கிறது
மீண்டும் புதியது படைப்போம்
மீள அதிலே நடப்போம்...!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=56

தொலைந்துபோன ஒற்றைப் பாதணி...

இது தொலைந்த ஒன்று இல்லை
என் செல்ல குட்டியின் காலில் இருந்து
தொலைக்கப் பட்டதாய் இருக்கும்

கிழிந்த ஒன்று வேண்டாம் என்று
எத்தனை முறைதான் சண்டையிடுவாள்
பாவம் அவள்
இந்தமுறை நான் கேட்கபோவதில்லை
புதிதாய் வாங்கி கொடுத்து
புன்னகை வாங்க போகிறேன்.....!

http://www.vaarppu.com/padam_varikal.php?id=55