Tuesday, June 30, 2009

யு(பு)த்தம்....?

வெளியான கவிதை:
நன்றி மாலைமலர் இணையதளம்:

http://www.maalaimalar.com/Articles/DetailedInteractive.aspx?iDId=285

யு(பு)த்தம்....?
செல்லடிகளால் எம்மக்கள்
சிதையுறும் போது
எதிரிகளின் மீதுகூட இனம்புரியா
சீற்றம்தான் வருகிறது
சொல்வருடி அவர்களை - நீங்கள்
தூக்கும் போது
எம் இனத்தை என்னி
துக்கம் தொண்டை கவ்வுகிறது....

இனத்திற்க்குள்ளே பெருச்சாளிகள் உங்களுக்கெதிராய்
இனப்பெருக்கம் செய்யும்போது
ஈழத்தை உனக்காக
இரவல் கேட்பது முட்டாள்தனம்....

விழிநீர் விட்டாலே
வேதனை படும் என் கூட்டமே
நம் இனம் அங்கே
உதிரம் விட்டு
உருக்குழைந்து போகிறதே
உன் பங்குதான் என்ன...?

மகிழுந்து தேடி
பயணம் செய்யும் - என்
மண்ணுலக வாசிகளே
மரங்களினூடே வாழும் - எம்மக்கள்
மனசு தேடி போகமாட்டீரோ...?

குரோசிமாவில் கூட
ஒரே மூச்சில் குண்டெறிந்து
உருக்குழைத்து போனார்கள்
ஆனால் நீங்கள் - இங்கே
கொஞ்சம் கொஞ்சமாய்
குறிவத்து கொன்று எரிக்கிறீர்கள்...!

மண்ணிழந்து ,வீடிழந்து
மழையோடும், வெயிலோடும்
உயிர்மட்டும் சுமந்து செல்லும்
ஒன்றுமறியா மக்களின்
உதிரம்தான் வேண்டுமா...?

ஏன் இந்த கொடூரம் உங்களுக்கு
நிறைமாத கற்ப்பினியை
நிரடலற்று புணர்தல் போல....?

குழந்தைகளின் தலை நோக்கி
துப்பாக்கி குழல் நீட்டும்
உங்களிடத்தில் போய்
இரக்கத்தை கோருவது
இறந்தவனிடத்தில்
இரவல் கேட்பதற்க்கு சமர்.....!

குழந்தைகளையும்
முதியோரையும்
கொன்று குவிக்கும்
யுத்தத்தை தொடர்ந்து கொண்டு
நாங்கள்
புத்தன் பிறந்த பூமியென்றும்
நீங்கள்
புத்தம் வளர்த்த பூமியென்றும்
பூரிப்பு அடைவதில்
புண்ணியம் ஒன்றும் இல்லை...!!

No comments: