Tuesday, June 30, 2009

கருவறை தின்ற கரு.......

நன்றி தமிழ்மன்றம்:
தமிழ்மன்ற கவிதை போட்டியில் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை:


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20303

முலை பால் குடித்து
முன்னேற்றம் அடைந்தவன் - அவள்
தோல் சிறுத்து இருக்கும்போது
வாய்சோறு தரமறுக்கும் பிள்ளை... தாய்மை எனும்
கருவறை தின்ற கரு....!

பிச்சையாய் பெற்றேணும்
இச்சையை தீர்த்துக்கொண்டு
மிச்சத்தை தூக்கி எறியும்
காதலர்கள்... காதல் எனும்
கருவறை தின்ற கரு....!

குருவிகளையும் பறவைகளையும்
குறைந்து போக வைத்து
அலை கோபுரங்களை பெருகவிட்ட
அறிவியல்... இயற்க்கை எனும்
கருவறை தின்ற கரு...!

மழலை கொன்று
மனிதம் தின்று
மண்ணை வென்றதாய்
மார்தட்டும் மாக்கள்... மக்கள் எனும்
கருவறை தின்ற கரு....!

உரிமையை நிலைநாட்டும்
ஒரு மை விரலுக்கு
பத்து விரல் நீட்டி
பணம் பெற்றோர்... உரிமை எனும்
கருவறை தின்ற கரு....!

மும்பை தாக்குதல்
முல்லைதீவு கொடூரம்
காஜா படுகொலைகள்
அன்பெனும் உலகம்.... மனிதம் எனும்
கருவரை தின்ற கரு....!

கருவரை தின்னும் கருக்கள் மாறட்டும்
கருப்பையில் நின்று ஒன்று சேரட்டும்
உலகின் உன்னதம் வளர்க்கும்
லட்சிய மகவாய் மாறட்டும்....!
கருப்பை போற்றும்
கவின்மிகு உறவாய் வாழட்டும்...!!

யு(பு)த்தம்....?

வெளியான கவிதை:
நன்றி மாலைமலர் இணையதளம்:

http://www.maalaimalar.com/Articles/DetailedInteractive.aspx?iDId=285

யு(பு)த்தம்....?
செல்லடிகளால் எம்மக்கள்
சிதையுறும் போது
எதிரிகளின் மீதுகூட இனம்புரியா
சீற்றம்தான் வருகிறது
சொல்வருடி அவர்களை - நீங்கள்
தூக்கும் போது
எம் இனத்தை என்னி
துக்கம் தொண்டை கவ்வுகிறது....

இனத்திற்க்குள்ளே பெருச்சாளிகள் உங்களுக்கெதிராய்
இனப்பெருக்கம் செய்யும்போது
ஈழத்தை உனக்காக
இரவல் கேட்பது முட்டாள்தனம்....

விழிநீர் விட்டாலே
வேதனை படும் என் கூட்டமே
நம் இனம் அங்கே
உதிரம் விட்டு
உருக்குழைந்து போகிறதே
உன் பங்குதான் என்ன...?

மகிழுந்து தேடி
பயணம் செய்யும் - என்
மண்ணுலக வாசிகளே
மரங்களினூடே வாழும் - எம்மக்கள்
மனசு தேடி போகமாட்டீரோ...?

குரோசிமாவில் கூட
ஒரே மூச்சில் குண்டெறிந்து
உருக்குழைத்து போனார்கள்
ஆனால் நீங்கள் - இங்கே
கொஞ்சம் கொஞ்சமாய்
குறிவத்து கொன்று எரிக்கிறீர்கள்...!

மண்ணிழந்து ,வீடிழந்து
மழையோடும், வெயிலோடும்
உயிர்மட்டும் சுமந்து செல்லும்
ஒன்றுமறியா மக்களின்
உதிரம்தான் வேண்டுமா...?

ஏன் இந்த கொடூரம் உங்களுக்கு
நிறைமாத கற்ப்பினியை
நிரடலற்று புணர்தல் போல....?

குழந்தைகளின் தலை நோக்கி
துப்பாக்கி குழல் நீட்டும்
உங்களிடத்தில் போய்
இரக்கத்தை கோருவது
இறந்தவனிடத்தில்
இரவல் கேட்பதற்க்கு சமர்.....!

குழந்தைகளையும்
முதியோரையும்
கொன்று குவிக்கும்
யுத்தத்தை தொடர்ந்து கொண்டு
நாங்கள்
புத்தன் பிறந்த பூமியென்றும்
நீங்கள்
புத்தம் வளர்த்த பூமியென்றும்
பூரிப்பு அடைவதில்
புண்ணியம் ஒன்றும் இல்லை...!!

மாறுவது எப்போது...?

மாறுவது எப்போது...?
(முகவைமுரசு வார இதழில் வெளிவந்த கவிதை - ஆகஸ்ட்-31 to செப்டம்பர்-6,2001)

உழைப்பு என்பதே தெரியாமல்
உறங்கி பொழுதை கழிக்கும்
முதலாளி வர்க்கம்...

ஓய்வு என்னவென்று தெரியாமல்
உடலை வருத்தி உழைக்கும்
உழைப்பாளி வர்க்கம்...

மகத்துவம் செய்யப்பட வேண்டிய
மதங்களையும்,ஜாதிகளையும்
வதம் செய்து வாழும்
வகுப்பு தலைவர்கள்...

உதிரம் குடித்தேனும்
ஓட்டுப்பெற்று ஒளிந்து கொண்ட
அரசியல் கூட்டம்...

அன்பு எனும் மருந்தை
அதிபாதாளத்தில் வீசிவிட்டு
அடிதடியை நாடும்
ஆக்ரோசமான களையர் கூட்டம்...

காதலின் புனிதம் அறியாமல்
கன்னியரை கலங்க வைக்கும்
"ஈவ்டீசிங்கை" கையில் எடுக்கும்
இளைஞர் கூட்டம்...

எந்த ஒரு செயலுக்கும்
எளிதாக லஞ்சம் கேட்க்கும்
எங்கள் அரசு ஊழியர்கள்...

இவர்கள் எல்லாம் மாறுவது எப்போது...?
நாம் மகத்துவம் பெறுவது எப்போது...?