(குஜராத் பூகம்பத்திற்க்கு நினைவு அஞ்சலி)
(பரமக்குடி முகவைமுரசு வார இதழில் வெளிவந்த கவிதை - ஜனவரி 25 to 31,2002)
குடியரசு தினத்தில்
குதூகலம் கொண்ட மனங்களில்
கோரமான சோகம்...
கட்டிடங்கள் சிறு
கற்களான கொடுமை...
கொடியேற்றிய சிறார்கள்
கோரமான கொடுமை...
மக்கள் வசித்துவந்த புஜ்
மயானமான கொடுமை...
அழகாய் இருந்த குஜராத்
அழிந்த ஒரு கொடுமை...
அன்பிற்க்கினிய இந்தியா
அழுத ஒரு கொடுமை...
அழத்தான் செய்தோம்...!
தம்பியை தேடும்
சகோதரிகள் இருவர்
"சஞ்சீ" என்று அழுதபோது...
மடியினில் மகனை வைத்து
மாயமாய் தன் உயிர் போனபோதும்
மகனை காப்பாற்றிய - அந்த
மகர ஜோதியை நினைத்த போது...
குடிசைகள் எல்லாம்
அழிந்த பின்னும்
கை குழந்தையோடு - அந்த
கோரத்தை பார்த்து கொண்டிருந்த
சகோதரனை பார்த்தபோது...
பத்துமாடி பணக்காரன் நேற்று
பைசா இல்லை
பிச்சைக்காரன் இன்று
பசிக்கிறது சாப்பாடு கொடு - என்ற
பெரியவரை பார்த்தபோது...
ஆறுதல் பட்டோம்...!
மனித நேயத்துக்கு ஏதடா மதம் என
மக்களுக்கு இரத்தம் தந்த - அந்த
முஸ்லீம் சகோதரர்களை நினைத்தபோது...
மதமும் இல்லை...
ஜாதியும் இல்லை...
மாற்றம் இயற்க்கை கையில்
மாறிய மக்களை பார்த்தபோது...
புதையுண்டது புஜ் ஆனாலும்
இழந்தது எங்கள் தேசம் என
இந்தியாவே அழுது
ஆதரவு தந்தபோது...
இயற்க்கை தாயே...!
அழித்தது போதும்
ஆதரவு கொடு...!!
பூமியை சிதைத்தது போதும்
புன்னகைத்து முத்தம் கொடு...!!
இனியும் வேண்டாமே...
எங்களால் முடியாது
இன்னொரு துயரத்தை தாங்க...!!
கவிதை என்பது வாசித்துவிட்டு போவதற்கல்ல.... அவை வாசனைமிக்க மலர்கள் ரசனையோடு நுகருங்கள்....! - தினைக்குளம் கா.ரமேஷ்
Monday, January 26, 2009
புதியதாய் ஒரு பூமி வேண்டும்...!
என் ஈழத்து சகோதரன்
எழுந்து நடக்க
ஏகதிபத்திய சுதந்திரம் வேண்டும்....!
ஆப்பிரிக்க நாடுகளில் வறுமை
அறவே இல்லையெனும்
அண்மை தகவல்கள் வேண்டும்....!
பயங்கரவாதம் தெரியாத
பண்பட்ட நேசத்தை
பங்காளி தேசங்கள் பகிற வேண்டும்...!
சாதிமத சாக்கடைகள் நீங்கி
சமத்துவ ஆறு
சங்கமித்தல் வேண்டும்...!
குண்டுகள் தொடுக்கும்
கொடூரர்கள் மறைந்து
அன்பு தொடுக்கும் நண்பர்கள் வேண்டும்....!
உலக கணினி செய்வோரையும்
உண்ண கழனி செய்வோரையும்
ஒரே சமராக பாவிக்க வேண்டும்...!
பணங்களுக்காக வாழும்
பச்சோந்தி மனிதர்கள் மாறி - நல்
மனங்களுக்காக வாழ வேண்டும்...!
பூலோகம் தழைத்தோங்க - இந்த
புயலான மாற்றங்கள் கொண்ட
புதியதாய் ஒரு பூமி வேண்டும்...!
எழுந்து நடக்க
ஏகதிபத்திய சுதந்திரம் வேண்டும்....!
ஆப்பிரிக்க நாடுகளில் வறுமை
அறவே இல்லையெனும்
அண்மை தகவல்கள் வேண்டும்....!
பயங்கரவாதம் தெரியாத
பண்பட்ட நேசத்தை
பங்காளி தேசங்கள் பகிற வேண்டும்...!
சாதிமத சாக்கடைகள் நீங்கி
சமத்துவ ஆறு
சங்கமித்தல் வேண்டும்...!
குண்டுகள் தொடுக்கும்
கொடூரர்கள் மறைந்து
அன்பு தொடுக்கும் நண்பர்கள் வேண்டும்....!
உலக கணினி செய்வோரையும்
உண்ண கழனி செய்வோரையும்
ஒரே சமராக பாவிக்க வேண்டும்...!
பணங்களுக்காக வாழும்
பச்சோந்தி மனிதர்கள் மாறி - நல்
மனங்களுக்காக வாழ வேண்டும்...!
பூலோகம் தழைத்தோங்க - இந்த
புயலான மாற்றங்கள் கொண்ட
புதியதாய் ஒரு பூமி வேண்டும்...!
சந்தோசம்...!
சந்தோசம்...
ஒவ்வொரு மனிதனும்
வேண்டுவது... விரும்புவது...
பிறருக்கு கிடைக்கும் சந்தோசத்தை
தடுப்பது சந்தோசமல்ல...
சந்தோசம்...
மனதின் கரியம்...
நாமெல்லாம்...
ஆசைபடுவதையும்
ஆசை படுகிற விஷயம்
அடைவதை சந்தோசம் என்கிறோம்...
சந்தோசம் என்பது
குதூகலம்..
குதூகலம் என்பது
மனமலர்ச்சி
மனமலர்ச்சி என்பது
கள்ளமில்லா சிந்தனை
கள்ளமில்லா சிந்தனை என்பது
பிறரை நேசித்தல்
பிறரை நேசித்தல் என்பது
மனம்விட்டு பேசுதல்...
சந்தோசம் என்பது அன்புசெய்தல்
சந்தோசம் என்பது பகிர்ந்து கொள்ளுதல்
அன்பு என்பது அமுத சுரபி
அமுதசுரபி அள்ள அள்ள குறையாது...
அன்பு...
காசு பணம் கொடுத்தால் குறையும்
ஆனால்
காணமுடியாத அன்பை கொடுத்தால்
குறையாது..
பத்தாய் திரும்பி வரும்...!
அன்பு
அன்பின் உறவு
இதயத்தின் வரவு
அன்பு பாலைவனம் ஆகாது
அது எப்போதும் பூக்கும் சோலைவனம்
அதில்
மகிழ்ச்சி தேன் உண்ண
மனிதவண்டுகள் வந்துகொண்டே இருக்கும்...
வாழ்க்கை சிறக்கும்
வசந்தம் பிறக்கும்...!
ஒவ்வொரு மனிதனும்
வேண்டுவது... விரும்புவது...
பிறருக்கு கிடைக்கும் சந்தோசத்தை
தடுப்பது சந்தோசமல்ல...
சந்தோசம்...
மனதின் கரியம்...
நாமெல்லாம்...
ஆசைபடுவதையும்
ஆசை படுகிற விஷயம்
அடைவதை சந்தோசம் என்கிறோம்...
சந்தோசம் என்பது
குதூகலம்..
குதூகலம் என்பது
மனமலர்ச்சி
மனமலர்ச்சி என்பது
கள்ளமில்லா சிந்தனை
கள்ளமில்லா சிந்தனை என்பது
பிறரை நேசித்தல்
பிறரை நேசித்தல் என்பது
மனம்விட்டு பேசுதல்...
சந்தோசம் என்பது அன்புசெய்தல்
சந்தோசம் என்பது பகிர்ந்து கொள்ளுதல்
அன்பு என்பது அமுத சுரபி
அமுதசுரபி அள்ள அள்ள குறையாது...
அன்பு...
காசு பணம் கொடுத்தால் குறையும்
ஆனால்
காணமுடியாத அன்பை கொடுத்தால்
குறையாது..
பத்தாய் திரும்பி வரும்...!
அன்பு
அன்பின் உறவு
இதயத்தின் வரவு
அன்பு பாலைவனம் ஆகாது
அது எப்போதும் பூக்கும் சோலைவனம்
அதில்
மகிழ்ச்சி தேன் உண்ண
மனிதவண்டுகள் வந்துகொண்டே இருக்கும்...
வாழ்க்கை சிறக்கும்
வசந்தம் பிறக்கும்...!
Wednesday, November 26, 2008
என்ன செய்தாய் ... ?
முத்தங்களுக்கு பொருந்தாது என
ஒதுக்கியது - என்
முகமாக இருந்து போகட்டும்...
மொத்தங்களுக்கும் பொருந்துமே - என் நேசம்
என்ன செய்தாய் அன்பே...?
ஒதுக்கியது - என்
முகமாக இருந்து போகட்டும்...
மொத்தங்களுக்கும் பொருந்துமே - என் நேசம்
என்ன செய்தாய் அன்பே...?
Tuesday, November 25, 2008
என் காதல்...!
எங்க ஊரு அரசியல்...!!
(ஆர்குட் - முத்தமிழ் மன்றம் நடத்திய கவிதை போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற கவிதை)

உணவு இல்லை உழவனுக்கு...
உடை இல்லை தச்சனுக்கு - ஆனால்
கட்சியின் பெயரால் - இங்கே
கஞ்சியும் பிரியானியும்
கம்புகளை தூக்குகிறது...!
வெய்யிலிலும்... மழையிலும்...
ஓட்டைக் குடிசைக்குள் ஒண்டிக்கிடந்தும்
அஞ்சும் பத்துமாய்
குருவிபோல் சேர்த்து
குடும்பத்தைப் பார்த்தாலும்...!
அர்த்த ராத்திரியில்
அத்தனையும் எரியும்
கட்சிகளின் வாசம்
கரிபுகையாய் தெரியும்...!
ஆளுயர விளம்பரங்களும்
அலங்கார மேடைகளும்
பல கோடி ரூபாய்களை
பங்கிட்டு செலவிடும்...
மூவாயிரம் பேரை வைத்து
முப்பது கூட்டம் கூட்டும் - அதில்
முழு பல கோடி கொட்டும்
இத்தனையும் நடக்கும்..!
உழவுக்கும் தொழிலுக்கும் - கடனாய்
ஓராயிரம் வாங்கினால்
ஒரு வருடம் முடிவத்ற்க்குள்
ஓடி வந்து கழுத்தை பிடிக்கும்...!
இதுவும் நடக்கும்...!!
ஒருபக்கம்..
சத்தமே இல்லாமல்
சரக்கு கட்டணம் உயரும்
பதற்றமே இல்லாமல்
பேருந்து கட்டணம் உயரும்
எதற்கென்று தெரியாமல்
எகிரும் வரிகள்...!
மறுபக்கம்...
வியர்வையை வயலில் போட்டு
உழைப்பை உணவாய் தரும் ஏழையின்
நெல்லுக்கும் மிளகாய்க்கும்
நெருடலே இல்லாமல்
விலைகள் குறையும்...!
புதிய சட்டங்கள்
பொக்கிசமான திட்டங்கள்
புற்றீசலாய் முளைக்கும்
புது அரசு அமைந்தால்
அத்தனை திட்ட்ங்களிலும்
புல்லுகள் முளைக்கும்..!
சீட்டுகளும் சில்லரைகளும்
கூட்டணிகளை மாற்றும்
பழி தீர்த்த்லும் பகை வளர்த்தலும்
வெற்றி பெற்றவன் பக்கம்
விருட்ச்சமாய் வளரும்...!
சகோதரனுக்காக...
தோழனுக்காக...
குடும்பத்திற்க்காக...
சாதிக்காக..
மதத்திற்காக..
மொழிக்காக - இங்கே
அரசியல் நடக்கிறது...
மக்களுக்காக நடக்கிறதா...?
மகான்களே சொல்லுங்களேன்...!!
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=42390143&tid=5284430110651767535&start=1
கவிதை: http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=42390143&tid=5264585781332738698&na=4&nst=1&nid=42390143-5264585781332738698-5267558444025961199

உணவு இல்லை உழவனுக்கு...
உடை இல்லை தச்சனுக்கு - ஆனால்
கட்சியின் பெயரால் - இங்கே
கஞ்சியும் பிரியானியும்
கம்புகளை தூக்குகிறது...!
வெய்யிலிலும்... மழையிலும்...
ஓட்டைக் குடிசைக்குள் ஒண்டிக்கிடந்தும்
அஞ்சும் பத்துமாய்
குருவிபோல் சேர்த்து
குடும்பத்தைப் பார்த்தாலும்...!
அர்த்த ராத்திரியில்
அத்தனையும் எரியும்
கட்சிகளின் வாசம்
கரிபுகையாய் தெரியும்...!
ஆளுயர விளம்பரங்களும்
அலங்கார மேடைகளும்
பல கோடி ரூபாய்களை
பங்கிட்டு செலவிடும்...
மூவாயிரம் பேரை வைத்து
முப்பது கூட்டம் கூட்டும் - அதில்
முழு பல கோடி கொட்டும்
இத்தனையும் நடக்கும்..!
உழவுக்கும் தொழிலுக்கும் - கடனாய்
ஓராயிரம் வாங்கினால்
ஒரு வருடம் முடிவத்ற்க்குள்
ஓடி வந்து கழுத்தை பிடிக்கும்...!
இதுவும் நடக்கும்...!!
ஒருபக்கம்..
சத்தமே இல்லாமல்
சரக்கு கட்டணம் உயரும்
பதற்றமே இல்லாமல்
பேருந்து கட்டணம் உயரும்
எதற்கென்று தெரியாமல்
எகிரும் வரிகள்...!
மறுபக்கம்...
வியர்வையை வயலில் போட்டு
உழைப்பை உணவாய் தரும் ஏழையின்
நெல்லுக்கும் மிளகாய்க்கும்
நெருடலே இல்லாமல்
விலைகள் குறையும்...!
புதிய சட்டங்கள்
பொக்கிசமான திட்டங்கள்
புற்றீசலாய் முளைக்கும்
புது அரசு அமைந்தால்
அத்தனை திட்ட்ங்களிலும்
புல்லுகள் முளைக்கும்..!
சீட்டுகளும் சில்லரைகளும்
கூட்டணிகளை மாற்றும்
பழி தீர்த்த்லும் பகை வளர்த்தலும்
வெற்றி பெற்றவன் பக்கம்
விருட்ச்சமாய் வளரும்...!
சகோதரனுக்காக...
தோழனுக்காக...
குடும்பத்திற்க்காக...
சாதிக்காக..
மதத்திற்காக..
மொழிக்காக - இங்கே
அரசியல் நடக்கிறது...
மக்களுக்காக நடக்கிறதா...?
மகான்களே சொல்லுங்களேன்...!!
http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=42390143&tid=5284430110651767535&start=1
கவிதை: http://www.orkut.co.in/Main#CommMsgs.aspx?cmm=42390143&tid=5264585781332738698&na=4&nst=1&nid=42390143-5264585781332738698-5267558444025961199
ஹைக்கூ..
Subscribe to:
Posts (Atom)