Wednesday, July 6, 2011

பணம் பறிக்கும் இந்திய ஏழைகள்

               இந்திய தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி உலகத்திலேயே மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் அறிவியல் துறையின் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது அதே சமயம் அந்த தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி எந்த அளவு பாமர மக்களை வளர்சிப்பாதைக்கு அழைத்து செல்கின்றது என்பதும் முக்கியம். அவை வளர்ச்சியைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றதா? இல்லை பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றதா?

வளர்ச்சி யாருக்கு..? பாதிப்பு யாருக்கு..?

        தொலைத் தொடர்புதுறை தொழிலில் லாபம் அடையாத நிறுவனங்களே கிடையாது அந்த‌ அளவுக்கு அவர்களின் வியாபார யுக்திகளும் , கவர்ச்சி அறிவிப்புகளையும் நாளுக்கு ஒன்றாய் அறிவித்து மக்களை முட்டாளாக்குதிலும் முன்னனியில் திகழ்கின்றனர். அந்த அறிவிப்பிலும், கவர்ச்சியிலும் மயங்கி எழ முடியாமல் திக்கி தவிப்பது மக்கள்தான். மக்களை இரு வகைகளாக பிரித்துக் கொள்ளலாம் ஒருசாரார் நன்கு சம்பாதித்து பொழுது போக்காய் செலவு செய்யும் மக்கள், அவர்களுக்கு இந்த பிரச்சனை ஒரு பொருட்டே கிடையாது, தெரியாமல் சாலையின் எல்லைக் கோட்டை தாண்டி வண்டியை நிறுத்தி விட்டு போக்குவரத்து காவல்துறையிடம் 100 அல்லது 200 ஐ கொடுத்து விட்டு சென்று கொண்டிருக்கும் மக்கள் அவர்கள்(எதிர் கேள்வி எதுவும் கேட்கமாட்டார்கள்). தேவைக்கும் அவசரத்திற்க்காகவும் மட்டுமே பார்த்து பார்த்து செலவு செய்யும் ஒரு சாரார்,அதே காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட பின்னும் கெஞ்சி ,மண்ணிப்பு கேட்டு எந்த அளவுக்கு குறைக்க முடியுமோ அந்த அளவுக்கு குறைத்து பணம் கொடுத்து மனசு நோகும் ஒரு சாரார்.

        இந்த இரண்டாம் வகையினர்களை பற்றி கண்டிப்பாக பேசியாக வேண்டும்.சமீபத்தில் ஊருக்கு சென்றிருந்தேன் ஒரு உறவின் முறை (அவர் ஒரு கூலி தொழிலாழி) தனது அலைபேசியை எடுத்துகொண்டு என்னிடம் வந்தார்.

             "அப்பு நல்லா இருக்குறீங்களா? என்னானு தெரியல நான் எப்போ காசு போட்டாலும் எடுத்துகிறானுக என்னானு பாருங்கப்பு.."
 

                      என்று தனது அலைபேசியை கொடுத்தார்.அவர் அதை வைத்திருப்பதிற்க்கு காரணம் தனது மகள் வெளியூரில் படிக்கிறார் அவருடனான தொடர்புக்காக மட்டுமே அதை வைத்திருக்கிறார். நான் பார்த்தில் அவருக்கு தின ராசி பலன்(daily horoscope) மற்றும் மட்டை பந்து  சேவை(cricket update) என்ற இரண்டு சேவைகள் செயல்படுத்தப் பட்டிருந்தது. நான் வாடிக்கையாளர் செவை மையத்திற்க்கு பேசி அந்த செவைகளை நிறுத்தச் சொல்லி அவரிடம் அலைபேசியை கொடுத்து விட்டு வந்தேன்.

        இப்பொழுது சொல்லுங்கள் நம்மையும் அறியாமல் நம்மிடம் பணம் பறிப்பவர்களுக்கு என்ன பெயர்?. பல சமயம் அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்தியை படித்தாலே சில சேவைகள் செயல்பட்டு விடுகின்றது. ஒன்றும் தெரியாதவர்கள் என்ன செய்வது பணத்தை இழந்து நிற்பதுதான் மிச்சம். நுகர்வோர் மையத்தையோ நீதிமன்றத்தையோ அனுகலாமே என்று கூறும் அறிவு ஜீவிகளே இன்றைய சூழலில் நன்கு படித்து எல்லாம் தெரிந்தவர்களே நீதிமன்றம் , நுகர்வோர் மையம் என்று அழைவதற்க்கு முடியாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு செல்லும் போது பாமர மக்கள், ஏழைகள் என்ன செய்து விட முடியும்.

        அவர்களை தொடர்பு கொள்ளும் முன் இந்த பொத்தானை அழுத்து அந்த எண்ணை அழுத்து என்று படாத பாடு படுத்தி விடுவார்கள்,அதற்க்குள் நமது பொறுமை எல்லாம் கரைந்து விடும்.அப்படி தொடர்பு கொண்ட பின்னும் அவர்கள் நம்மை காக்க வைக்கும் நேரம் இருக்கிறதே அதை சொல்லி மாளாது.... 

           அலைபேசி வாடிக்கையாளர் மையம் எதற்க்கு என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.எத்தனை பிரச்சனைகளை அவர்கள் தீர்த்து வைத்திருப்பார்கள்? உண்மையாகவே இவர்களுக்கு இருக்கும் பிரச்சனை தெரியாதா? தெரிந்தும் ஏன் மறைக்கிறார்கள்? அவர்கள் சொல்வதை சொல்லும் கிளிப்பிள்ளை போல் 

"வணக்கம் தங்களுக்கு என்ன பிரச்சனை தெரிந்து கொள்ளாமா?" 
"காத்திருந்தமைக்கு நன்றி"
"விரைவில் சரி பார்க்கிறோம் சேவை மையத்தை அனுகியதற்க்கு நன்றி". 

இவைதான் பெரும்பாலும் கேட்க கூடிய பதில்.இதை சொல்வதற்க்கு எதற்க்கு அவர்கள்.இந்த லட்சனத்தில் அதை பதிவு வேறு செய்து கொள்கிறார்கள்.பதிவு செய்வதை ஒரு முறையாவது கேட்டிருப்பார்களா அதன் மேளாளர்கள்? பின்பு அப்படி இத்தனை பிரச்சனைகள். யாராவது சொல்லுங்கள் நீங்கள் வாங்கியதில் இருந்து உங்கள் அலைபேசி சேவையில் எந்த ஒரு பிரச்சனையும் இருந்ததில்லையா?.

        குறைந்த பட்சம் ஒவ்வொரு நிறுவனமும் 10 கோடி வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும்.ஒவ்வொருத்தருக்கும் குறைந்த பட்சம் 1 ரூபாய் மோசடி செய்வதாக கணக்கிட்டால் கூட‌ 10 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள்,இவை குறைந்த பட்சம் அதிகபட்சம் எவ்வளவோ யாருக்கும் தெரியாது.இந்த நிறுவன தலைவர்கள்தான் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் தங்களது வேலைகளை காட்டி பல கோடிகளை சுருட்டி இருக்கிறார்கள் ஆக நாட்டையும்,நாட்டு மக்களையும் சுரண்டி கொலுத்து பெருகும் இவர்கள் பணக்காரர்கள்... ஆனால் இந்தியா ஏழைகள் நிறைந்த‌ நாடு.

        குறைந்த பட்ச சமுதாய நோக்கம் கூட இல்லாமல் அப்படி சம்பாதித்து என்ன செய்ய போகிறார்கள் இவர்கள்?. இப்பொழுதே பல பறவைகளை (எ.கா:சிட்டுகுருவி,செண்பகம் மற்றும் குயில்) காண முடிவதில்லை, பலருக்கு கதிர்வீச்சு பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பரவுகின்றது. எல்லாம் அலைபேசி கோபுரங்களின் அன்பளிப்பு. இவற்றையெல்லாம் முறைபடுத்தி சில இடங்களில் மட்டும் வைக்கலாமே ஏன் கண்ட இடங்களில் வைத்து பாதுகாப்பற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். இயற்க்கையை ஏன் உதாசீன படுத்துகிறார்கள். சேவை கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பது போதாமல் ஏன் மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்கிறார்கள். இந்த பணக்கார‌ ஏழைகள் எவ்வளவு நன்மைகள் இந்தியாவிற்காக செய்திருக்கிறார்கள்?

                    தொலைதொடர்பு துறையில் நன்மைகளே இல்லையா என்று கேட்க வேண்டாம். தீமைகளை களைய வேண்டும் என்பதே எண்ணம்.


        தனியார் மயம் என்ற போர்வைக்குள் என்று இந்தியா புகுந்ததோ அன்றிலிருந்தே போர்வைக்குள் நடக்கும் மர்மங்களும், கொள்ளைகளும் வெளித்தெரியாமலே போய்க்கொண்டிருக்கிறது. இந்த தனியார்மய வாதிகள் கடைசியில் பிடுங்குவது மக்களின் பணம். (இவர்கள்தான் இந்தியவின் பெரும்பணக்காரர்கள் ஆனால் இவர்கள் பிச்சைகாரர்கள், திருடர்களை விட கேவல
ம்). இந்த இந்தியாவின் நோய்களை, ஊழல் பெருச்சாலிகளை எப்படி புறக்கணிக்க போகிறோம்..? அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் நன்மைக்கு உட்பட்டு... யோசிப்போமா..?

1 comment:

suja said...

nice.. future la enagayo poga porenganu ninaikiren...