Saturday, January 29, 2011

தயாராய் இரு என் தமிழினமே....



முப்ப‌து பேருந்து கொளுத்துவோம்
முழுவ‌தும் ஊர‌ட‌ங்கு செய்வோம்
அர‌சிய‌லுக்காய் அடித‌டி ப‌ண்ணுவோம் ஆனாலும்
அமைச்சர் பேர் சொல்லி அழ‌காய் த‌ப்பிப்போம்...

சொந்த நாட்டில் சுதந்திர கொடி ஏற்றா விட்டாலும்
அண்டை நாட்டு தேசத்திற்க்கு
அதிகாரம் கொடுப்போம் என்போம்

பாராளுமன்ற வளாகத்தில்
பத்து ரூபாய்க்கு உணவு கிடைக்கும்‍ இருந்தும்
ப‌த்தாது ச‌ம்ப‌ள‌ம் என‌
ப‌ல‌ம‌ட‌ங்கு உய‌ர்த்திக் கொள்வோம்...

பணம் பதுக்குவோம்
பட்டியல் இடமாட்டோம்
நிலம் அபகரிப்போம்
நேர்மை உள்ளவர் என்போம்...

ஏர் பிடிப்பவர் இறந்தாலென்ன‌
மீன் பிடிப்பவர் மறைந்தாலென்ன‌
இற‌ந்த‌வ‌ரின் கல்லறையில் கொடியேத்தி
ஏக‌போக‌அர‌சிய‌ல் செய்வோம்...

பாவ‌ப‌ட்ட‌ஜென்ம‌ங்க‌ள்
ப‌ட்டினியால் கிட‌ந்தாலென்ன‌
பாலும்,ப‌ல‌ச‌ர‌க்கும் விலையில்
ப‌ல‌ம‌ட‌ங்கு உய‌ர்ந்தாலென்ன‌...

எங்க‌ளை தேர்ந்தெடுக்க‌உங்க‌ளுக்கு
ஆயிர‌ம் ரூபாய் கொடுத்து
அடிமை ஆக்கிய‌ க‌தை தெரியாதோ...?

அறிவு ஜீவிக‌ள் யாரும்
வாக்கு ப‌திக்க‌வ‌ரமாட்டார் என்ற‌
அடிப்ப‌டைதான் எங்க‌ளுக்கு புரியாதோ...?

கொடிபிடிக்கும் என் தமிழினமே
கொண்டாட‌ த‌யாராய் இரு
ஆயிரம் ரூபாய் பணமும்
ஆட்டுக்கால் பிரியாணியும் தயார்
நாங்கள் வருகிறோம் உங்கள் வீட்டுக்கு
நீங்கள் தயாராய் இருங்கள் வாக்களிக்க...!!

5 comments:

Thiru said...
This comment has been removed by a blog administrator.
Thiru said...

உண்மை !!

Hariharn said...

Lets start comparing about the awareness of 49(O)

sofi said...

its nice...continue writing

தினைக்குளம் கா.ரமேஷ் Thinaikulam k.Ramesh said...

நன்றி திரு,ஹரி & சோபி