Sunday, September 4, 2011

கலங்கி போன சாமி...

அதிகாலை நான்கு மனிக்கு
அக்னி வளர்த்து யாகம்
காலையில் களைகட்டும்
பொங்கல் விழா
மதியம் கருவாட்டு குழம்பு கூழ் ஊற்றி
மகிழ்ச்சி கொண்டாட்டம்
மாலையில் கரகாட்டம் அதில்
மதி மயங்கும் குத்தாட்டம்
இரவில் தேர்ப்பயண வீதிஉலா என‌
இனிமையாக இருந்தது திருவிழா...

நள்ளிரவு ஆடல் பாடலில்
தலைவன் பாடல் போடவில்லை என்ற‌
தடியடி கலவரத்தில்
தப்பித்து ஓடிய கூட்டத்தைப் போலவே
கருவறைக்குள் நடுங்கியபடி
கலங்கிக் கொண்டிருந்தது
எல்லோரையும் காக்கும் சாமி...!

நன்றி : கீற்று

1 comment:

முனைவென்றி நா. சுரேஷ்குமார் சேர்வை said...

நடைமுறையை அப்படியே எடுத்துக்காட்டும் கவிதை. கிராம மண்வாசனை வீசுகிறது இந்தக் கவிதையில். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 'அருமை'.